நடிகர் சிவகார்த்திகேயன்தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து, தயாரித்து வரும் புதிய படம் ‘கனா’. இந்த படத்தில் கதை நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடித்திருக்கிறார்அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படம் மகளிர் கிரிக்கெட்டின் இன்னொரு பக்கத்தை சித்தரிக்கிறதாம்.
நடுத்தரவகுப்பு குடும்பத்தைச்சேர்ந்த பெண்,பல்வேறு போராட்டங்களை கடந்து இந்திய கிரிக்கெட் அணியில் எவ்வாறு இடம்பிடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதையாம்.இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசர் மற்றும் இசையை ஆகஸ்ட் 23ம் தேதி வெளியிட இருப்பதாக சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.