கேரளாவில் ஏற்பட்ட வெள்ள சேதத்துக்கு தமிழ்த் திரையுலகை சேர்ந்த நடிகர்–நடிகைகள், பட அதிபர்கள், இயக்குனர்கள் என பலரும் தாராள மனப்பான்மையுடன் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள்.இந்தநிலையில், நடிகர் விக்ரம் ரூ 35 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.இன்று காலை விக்ரமின் மேனேஜர் சூரியநாராயணன் கேரளமுதல்வர் பினராயி விஜயனை சந்தித்து காசோலையை வழங்கினர் இதே போல், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
தமிழ் நடிகர்களிலேயே அதிக அளவில் நிதி உதவி அளித்திருப்பவர் விக்ரம் என்பது குறிப்படத்தக்கது