ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவான பம்பரக் கண்ணாலே’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான ஆர்த்தி அகர்வால்(வயது 31) இன்று காலை அமெரிக்காவில் திடீர் மரணம் அடைந்தார். 1984-ல் பிறந்த ஆர்த்தி அகர்வால் அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் பிறந்தவர். 2001-ல் பாகல்பன் என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, வெங்கடேஷ் ஜோடியாக ‘நுவ்வு நாக்கு நச்சவ்’ என்ற படத்திலும் நடித்தார். இப்படங்களின் மூலம் ஆர்த்தி அகர்வால் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தெலுங்கில் பிரபல நடிகையானார். 2005-ல் தமிழில் பம்பரக் கண்ணாலே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அதை தொடந்து தமிழில் பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் தெலுங்கு பபடங்களிலேயே நடித்தவர் . 2009-ல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்கே திரும்பினார். அதன் பிறகு சமீபத்தில்தான் ‘ரணம் 2 ‘என்ற தெலுங்குப் படத்தில் மீண்டும் நடித்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து , அட்லாண்டிக் நியூ ஜெர்சியில் உள்ள ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு ஆஸ்த்மா கோளாறு என்பதால் மரணமடைந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம், லைப்போசக்ஷன் எனும் கொழுப்பு நீக்க அறுவைசிகிச்சை செய்ததன் காரணமாகவே, மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டு அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இவரது மரணம் ஆந்திர திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!/