கேரள மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெருமழை பெய்து, பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரை 350-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர்.மாநிலத்தில் மீட்புப் பணிக்காக ராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மிகஅடைமழை (கனமழை) எச்சரிக்கை திரும்பப் பெறுவதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.கேரளாவில் அடிப்படை தேவைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர்.இந்நிலையில் இளைய திலகம் பிரபு கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.இந்நிலையில் இயக்குனர் A.R முருகதாஸ் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.