அதிகமான தொகையைக் கொடுத்தவர் சீயான் விக்ரம்.
பேரிடர் செய்தி கேட்டதுமே பதறிப்போய் 25 லட்சத்தை வாரி வழங்கியவர்கள் சூர்யா,கார்த்தி,கமல்ஹாசன் .
இதன்பிறகு எல்லா நடிகர்களுமே அவர்களால் இயன்றதை அள்ளிக்கொடுத்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி கூட தனது சூப்பர் பட்டத்துக்கு ஏற்ப பெருந் தொகையைக் கொடுப்பார் ,அதனால்தான் அவரது அறிவிப்பு வர காலதாமதமாகிறது என அவரது ரசிகர்களே நம்பி இருந்தனர் . ஆனால் 15 லட்சம் என்பதுடன் நிறுத்தி விட்டார்.
ஆனால் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்தோ 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.அவர் அடிக்கடி சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது.
திரைப்படச் செய்தியாளர்களுடன் அவர் பேசும்போது “போகும் போது என்னத்த கொண்டு போகப்போறோம். இருக்கிறத இல்லாதவங்களுக்கு கொடுத்திட்டுப் போவோம்ணே”என்பார்.
அதுதான் தற்போது நடக்கிறது.
தனது உடல் நலிவுற்ற நிலையிலும் கேரள மக்களின் துயரத்தில் பங்கு கொள்ளும் பாங்குக்கு வீர வணக்கம் கேப்டன்..!