தனுஷ்,வெற்றி மாறன் தயாரிப்பில் வெளியான ‘காக்கா முட்டை’ ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் (சின்ன காக்கா முட்டை,பெரிய காக்கா முட்டை ) ரமேஷ், விக்னேஷ் ஆகிய இரண்டு குட்டிநடிகர்களும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனியின் தீவிர ரசிகர்களாம். தோனியை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்ற இவர்களின் ஆசையாம் . இதை நடிகர் தனுஷ் மூலமாக தெரிந்து கொண்ட , இப்படத்தை வாங்கி வெளியிட்ட பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் , அவர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளது., ஆம். சமீபத்தில் இருவரும் தோனியை நேரில் சந்தித்து தங்கள் ஆசையை நிறைவேற்றி கொண்டனர்.