பேயாட்டம் போட்டு கேரளாவை நாசம் பண்ணிட்டு போயிருக்கு நாசகார மழை,! எத்தனை பேர் செத்தாங்க, எத்தனை பேர் மிஸ்ஸிங் ? அரசாங்கமே அதிர்ந்து போய் இருக்கு. திராவிட நாட்டின் ஒரு பகுதியாச்சே கேரளம்! துடித்துப் போனான் தமிழன். இதோ லாரன்ஸ் மாஸ்டர் ஒரு கோடி ரூபாயை கேரள மாநில முதலமைச்சர் பினராயியிடம் கொடுக்கப்போகிறார்.
“போகலாம்னு பார்த்தேன்.நேரில் அந்தந்த பகுதி மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்லிட்டு வரலாம்னுதான் நினைச்சேன். ஆனால் இன்னும் பாதைகள் சீரமைக்கல. கஷ்டம்.அதான் சி.எம்.மை நேரில் பார்த்து கொடுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் அவரிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை இன்னும் இரண்டு நாளில் கொடுக்கிறேன்” என சினிமா முரசம் நிருபரிடம் சொன்னார் மாஸ்டர். மகராசனா இருப்பிங்க,!