முன்பு திரையுலக நட்சத்திரங்கள் பலர் தங்களது கடைசிக்காலத்தைஎப்படி கழித்தார்கள் என்பதற்கு தியாகராஜபாகவதர்,சந்திரபாபு ,சாவித்திரி உள்ளிட்ட பலர் உதாரணம்.
ஆனால் இப்போதெல்லாம் நடிகர், நடிகைகள் பலரும் தங்களது எதிர்காலத்தை தாங்களே வடிவமைத்துக்கொள்கின்றனர் மிகவும் தெளிவாகவே.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கேற்ப தங்களது புகழ் உச்சத்தில் இருக்கும் போதே கார்ப்பரேட் கம்பெனி என்றாலும் கூட கணிசமான தொகை கிடைத்தால் போதும், கிடைக்கின்ற வாய்ப்புகளை நன்றாகவே பயன்படுத்திகொள்கின்றனர்.
அந்த வகையில் நடிகர்,நடிகையர் பலரும் காண்டிராக்ட் அடிப்படையில் பல நிறுவனங்களின் பிராண்ட்அம்பாசிடராக மாறி வருகின்றனர் .
இந்த பட்டியலில் தற்போது கீர்த்திசுரேசும் ரிலையன்ஸ் ட்ரண்ட்ஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளாராம்.
இதுகுறித்து கீர்த்தியும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இன்று காலை சென்னை அண்ணாநகரில் கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்ட விழாவில் அந்நிறுவனத்தில் மண்டல செயல் அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.