“ உன்னால் என்னால் “என்கிற வித்தியாசமான டைட்டிலில் ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடமொன்றில் இயக்குனர் ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா,சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சோனியா அகர்வால் வில்லி வேடத்தில் நடிக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் கூறியதாவது..
பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான்.தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்ல. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும்.
மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் சோனியா அகர்வால் ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார் அந்த வலையில் வந்து சிக்குகிறார்கள் ஜெகா, உமேஷ் ஜெயகிருஷ்ணா மூவரும்.
இவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் கதை.அமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம். என்றார் இயக்குனர்.