இசையமைப்பாளரும், நடிகருமான GV பிரகாஷ் குமார் இன்று தனது பிறந்தநாளை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார். GV பிரகாஷ் அறிமுகமான ‘டார்லிங்’ திரைப்படம் தயாரிப்பாளர்கள், விநியோகதகர்களுக்கு இவ்வாண்டு நல்ல ஆரம்பததை தந்தது. மேலும் பேய் படங்களுக்கு தனி ஒரு இடத்தையும் பெற்றுத்தந்தது.GV பிரகாஷ் குமார் தற்போது அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இறுதி கட்ட வேலைகளில் இறங்கியுள்ளார்.
2015ல் கதாநாயகனாக அவதரித்துள்ள GV பிரகாஷ் குமாரை வரவேற்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் கலைபுலி S தாணு அவர்களின் தலைமையில் வந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஜி.வி.பிரகாஷுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்./