மிகப்பெரிய அளவில் திரண்டிருந்தார்கள் திரைக் கலைஞர்கள் கோவையில்.! கலைஞர் கருணாநிதிக்கு நினைவு அஞ்சலி. புகழஞ்சலி என்றும் சொல்லலாம். கூட்டத்தில் பேசிய இளையவேள் ராதாரவி, பார்த்திபன் இருவரும் சில குறிப்புகளை மறைமுகமாக நினைவுறுத்தினார்கள்.
“பிடிக்கவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள்” என யாரை ஜாடையாக சொல்கிறார் ராதாரவி.? அழகிரி என்றால் அவர்தான் தலைவர் கலைஞரால் ஐந்தாண்டுகளுக்கு முன்னே விலக்கி வைக்கப்பட்டவர்தானே!
அடுத்து பார்த்திபன். சிறு கதையுடன் தொடங்கினார். “எனது அருகில் இருந்த ராதாரவி “அடுத்த மாதம் நடக்கப்போவதை நினைச்சு சங்கடப்படுகிறாரோ என்னவோ செயல்தலைவர் சங்கடப்படுகிறார் ” என்பதாக சொன்னார். அதற்காகவே ஸ்டாலினுக்கு ஒரு டானிக் கொண்டு வந்திருக்கிறேன். ஒரு நிமிடம் மேடைக்கு வாருங்கள் என சொன்னவர் ஸ்டாலின் வந்ததும் ஒரு மஞ்சள் ஆடையை அணிவித்து இதுதான் டானிக் ‘என்றார்.
கலைஞரின் தோளில் மஞ்சள் துண்டு எப்பவுமே இருக்கும் !
சத்யராஜ் பேசுகையில் “வருகிற 27.ம் தேதிவரை தான் ஸ்டாலின் செயல்தலைவர் அதன்பிறகு திமுகவின் தலைவர் “என உறுதி செய்து விட்டுப் போனார்.