ரசிகர்களை சமாளிப்பது என்பது தனிக்கலைங்க!
ஒவ்வொரு தடவையும் சுற்றுப்பயணம் முடித்து மக்கள் திலகம்,நடிகர் திலகம் இருவரும் அறைக்குத் திரும்புகிற போது செய்தியாளர்களிடம் கைகளை காட்டுவார்கள். அவ்வளவும் நகக்கீறல்கள். வாத்சாயனன் சொல்லிச்சென்றுள்ள கீறல்கள் இல்லை. ரசிகர்களின் அன்புச்சின்னம். காரில் நின்றபடியே கீழே இருக்கிற ரசிகர்களிடம் கையை நீட்டுகிற போது ரசிகர்களையும் அறியாமல் அத்தகைய கீறல்கள் வாடிக்கையாகி விட்டது. ஆந்திராவுக்கு ‘என்.ஜி.கே’ படப்பிடிப்புக்கு சூர்யா சென்றிருந்தபோது ஆந்திர ரசிகர்கள் அவர் கேரவானை விட்டு இறங்கியதும் …..
அப்புறம் என்ன….பலாப்பழத்தில் மொய்க்கிற ஈக்கள்தான்!
“சூர்யாவின்’ என்ஜிகே’ படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெறுகிறது” என்று இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்டதிலிருந்து. அங்குள்ள ரசிகர்கள் அவரை காணப் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து குவிந்தபடியே! “ராஜு பாய் ..ராஜூ பாய் ” என்று ரவுண்டு கட்டிவிட்டார்கள். தமிழ்நாட்டைப் போல் ஆந்திராவிலும் சூர்யா,கார்த்தி இருவருக்குமே ரசிக பட்டாளம் இருக்கிறது.

அவர்களுடன் பேசிய பின்னர்தான் சூர்யா ஷூட்டிங் ஸ்பாட் செல்ல முடிந்தது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் படம்தான் என்ஜிகே. திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க ட்ரீம் வாரியார் பிச்சர்ஸ் எஸ்.ஆர்.. பிரகாஷ் பாபு , எஸ் ஆர் . பிரபு தயாரிக்கிறார்கள்.