விஷா ல், அனு இம்மானுவேல்,கே பாக்யராஜ், ஆன்ட்ரியா ஆகியோரது நடிப்பில் உருவான துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஸ்கின் தனது அடுத்த படமாக உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.
இதன் ஆரம்பகட்ட பணிகள தற்போது தொடங்கப்பட்டு மிகவும் மும்முரமாக நடந்து வருகிறது.
செக்கச்சிவந்தவானம் படத்தின் முக்கிய நாயகியான அதிதி ராவ் இப்படத்தின் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார் . உதயநிதியுடன் முதன்முறையாக ஜோடிசேரும் அதிதிராவ் இப்படம் தனக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாக அமையும் என நம்புகிறார்.மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ,சில முன்னணி நடிகர், நடிகைகளும்,தொழில்நுட்பக்கலைஞர் களும் இப்படத்திற்குள் வரவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு திரையுலகில் எகிறியுள்ளது .