Direction : Muruganand
Producion : Handmade Films
Starring : Santhanam, Ashna Zaveri, Akhila Kishore
Music : Santhosh Kumar Dhayanidhi
Cinematography : Gopi Jagadesswaran
Editing : Anthony L. Ruben
RATING 3/5
நகைச்சுவை நாயகன் சந்தானம் இரண்டாவது முறையாக ஹீரோவாக நடித்துள்ள படம். ‘இனிமே இப்படித்தான்’.
நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றும் நாயகன் சந்தானம். இவரின் அப்பா ‘ஆடுகளம்’ நரேன் சொந்தமாக திருமண மண்டபம் வைத்து நடத்தி வருகிறார். சந்தானத்தின் அம்மா பிரகதி, கடவுள் பக்தி மற்றும் ஜாதகத்திலும் அதீத நம்பிக்கை கொண்டவர்.
இந்நிலையில், சந்தானத்தின் ஜாதகத்தை பார்க்கும் ஜோசியக்காரர் ஒருவர்,சந்தானத்துக்கு இன்னும் மூன்று மாதத்திற்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லையென்றால் இன்னும் நான்கு வருடம் கழித்துதான் திருமணமே! இல்லையென்றால் சாமியாராக மாறக்கூட வாய்ப்பு இருக்கிறது எனக் குண்டைத் தூக்கிப்போடுகிறார்.இதைகேட்டநரேனும்,பிரகதியும் சந்தானத்திற்கு உடனே பெண் பார்க்கும் படலத்தை தொடங்க, ஆனால் சந்தானத்திற்கு யாரையும் பிடிக்காமல் போகிறது.இந்நிலையில் சந்தானத்தின் நண்பரான விடிவி கணேஷ், அவரை லவ் மேரேஜ் செய்யச் சொல்லி மனதை மாற்றுகிறார் .காதல் திருமணத்தின் மீது ஒரு ஈர்ப்பை உண்டாக்குகிறார்.
இதையடுத்து சந்தானம், அழகான பெண்களை தேடி அலைகிறார். எந்த பெண்ணும் கிடைக்காத நிலையில், நாயகி ஆஸ்னா சவேரியை சந்திக்கிறார். பார்த்தவுடனே அவர் மீது காதல் வயப்படுகிறார். ஆனால் ஆஸ்னா, சந்தானத்தின் காதலை ஏற்க மறுக்கிறார்.
இந்நிலையில், சந்தானத்தின் பெற்றோர்கள் அகிலா கிஷோரை பெண் பார்த்து முடிக்கிறார்கள்.அஷ்னா சவேரி தன் காதலை ஏற்றுக் கொள்ளாததாலும், சந்தானத்தின் மாமாவான தம்பி ராமையாவின் சூழ்ச்சியாலும் அகிலா கிஷோரை திருமணம் செய்ய சம்மதித்து, இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. இந்த நேரத்தில், ஆஸ்னாவுக்கு சந்தானத்தின் மீது காதல் வருகிறது. இருவரின் பிடியில் சிக்கிய சந்தானம் இறுதியில் ஆஸ்னாவின் காதலை ஏற்றுக் கொண்டு திருமணம் செய்தாரா? அல்லது பெற்றோர்கள் பார்த்த அகிலா கிஷோரை திருமணம் செய்தாரா? என்பதை காமெடி என்கிற சரவெடியோடு சொல்லியிருக்கிறார்கள்
சந்தானம், முந்தைய படத்தை விட, இப்படத்தின் மூலம் நாயகனுக்கான முழு அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.எடிட்டிங் இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம்!
நடனம், காதல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், சென்டிமென்ட்,டைமிங் காமெடி என அனைத்தையும் மிக பிரமாதமாக செய்திருக்கிறார்.
ஆஸ்னா சவேரி,அகிலாகிஷோர் ஆகியோர் மத்தியில் இவர் மாட்டிக்கொள்வது, தாய் மாமாவான தம்பிராமையா,மற்றும் விடிவி கணேஷை கலாய்ப்பது ஆகிய காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது. சந்தானம் படத்தில் ரசிகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்களோ, அது அத்தனையும் இப்படத்தில் இருக்கிறது. கூடவே படத்தை நகர்த்திச் செல்ல ஒரு சுமாரான கதையும், அதை போராடிக்காமல் கொண்டு செல்ல (பாக்யராஜ் பார்முலா) சுவாரஸ்யமான திரைக்கதையும் இருக்கிறது. படத்திற்கு பலமே திரைக்கதைதான். ஒரு காட்சியில் கூட ரசிகர்களை தொய்வடைய விடாமல் படத்தை சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார். சந்தானத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை சரியாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்களான முருகனாந்த் (முருகன், ஆனந்த்). சபாஷ்! கெட்டிக்கார இயக்குனர்கள்! சந்தோஷ் தயாநிதி இசையில்.பாடல்கள் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் ‘ஓகே’வாக இருந்தாலும், படத்தின் ஓட்டத்திற்கு அவை தடையாகவே இருக்கின்றன. குறிப்பாக இரண்டாம்பாதியில் வரும் 3 பாடல்கள்., பின்னணி இசை, கலர் கிரேடிங் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஆஸ்னா சவேரி மாடர்ன் பெண்ணாக வருகிறார்.. பாடல் காட்சிகள், சந்தானம் மீது காதல் வயப்படும் காட்சிகள், சந்தானம் மீது கோபப்படும் காட்சிகள் என தன் திறமையை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இரண்டாம் நாயகியான அகிலா கிஷோர் (அச்சு அசலாக நயன்தாரா மாதிரியே!) குடும்ப பெண்ணாக வந்து மனதில் பதிந்திருக்கிறார். சந்தானத்திற்கு அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன், அம்மா பிரகதி, டெய்லராக வரும் விடிவி கணேஷ், தாய் மாமா தம்பி ராமையா, மற்றும் நண்பர்களாக வருபவர்கள் ஆகிய அனைவரின் நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. . கிளைமாக்சில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் ரசிகர்களை கூடுதலாக ரசிக்க வைத்திருக்கிறது.கோபி ஜெகதீஷ்வரன் தன்னுடைய ஒளிப்பதிவில் நடிகர்கள், நடிகைகளை அழகாக காண்பித்திருக்கிறார். ரசிகர்களின் மனதில் நங்கூரம் போல் பதிந்து விடும் இப்படத்தின் வித்தியாசமான கிளைமாக்ஸ் யாருமே யூகிக்க முடியாததாக உள்ளது.
மொத்தத்தில் பல ஓட்டைகள் இருந்தாலும் , ‘இனிமே இப்படித்தான்’ பார்த்து ரசித்து மகிழ்ந்து விட்டு வரலாம்!
////////////////////////////////////////////////////////////////////////////////