Direction : Lakshman
Production : Madras Enterprises
Starring : Jayam Ravi, Hansika, Vamsi Krishna, Poonam Bajwa
Music : D. Imman
Cinematography : S. Soundar Rajan
Editing : Anthony.
‘ஜிம்’ பயிற்சியாளராக,ஜெயம் ரவி. எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவாக நினைக்கும் இவர் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை அனைவருக்கும் பயிற்சியாளராக இருப்பதால், அனைவரும் இவரிடம் அனைவரும் சகஜமாக பழகுகின்றனர். ஒருமுறை ஆர்யாவுக்கு டிரெயினிங் கொடுப்பதற்காக விமானத்தில் எகானமி கிளாஸில் பயணம் ஜெயம் ரவியை பார்க்கும் ஏர் ஹோஸ்டஸான ஹன்சிகா அவர் பெரிய பணக்காரர்என தப்புக்கணக்கு போட்டுவிடுகிறார்.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட ஹன்சிகா, பணம் தான் வாழ்க்கை என நினைக்கும் இவர் பெரிய பணக்காரவாலிபனை காதலித்து ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என்ற லட்சியத்தோடு வலம் வருகிறார். இதனால் ஜெயம் ரவியை காதலித்து தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள முடிவெடுக்கிறார். ஒருகட்டத்தில் ஜெயம் ரவியே ஹன்சிகாவை நேரில் பார்த்து அவளது அழகில் மயங்கி, காதலில் விழுகிறார். இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள்.
அப்போது , ஜெயம் ரவி, பணக்காரன் இல்லை, சாதாரண ஒரு ஜிம் கோச்என்ற விஷயம் ஹன்சிகாவுக்கு தெரிய வருகிறது. வாழ்க்கையை சந்தோஷமாகஅனுபவிக்க பணம்தான் தேவை. என்று ஜெயம் ரவியை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கிவிட்டு செல்கிறார் ஹன்சிகா.
இறுதியில், ஹன்சிகா தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து சந்தோஷமாக வாழ்ந்தாரா? இல்லையா! என்பதே மீதிக்கதை. புதிய மொந்தையில் பழைய கள். முதல் பாதி,இரண்டாம் பாதி என பிரித்து பார்க்க முடியாத அளவு ஒரே சவ்வு! மற்றபடி, ஜெயம் ரவி, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக தெரிகிறார். கேரக்டருக்காக உடல் பெருத்து இருந்தாலும் அவரை ரசிக்கமால் இருக்க முடியவில்லை. நடிப்பிலும் ஜாலி. ஹன்ஷிகாவும் அழகு தான் என்றாலும் வத்திப்போன உடல் அமைப்பால் எடுபடவில்லை!
அதே சமயம் அவருக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகளும் கொடுத்திருக்கிறார். ஹன்சிகா. ஜெயம் ரவியை கழட்டி விடுவதற்காக செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. ஜெயம் ரவிக்கு இன்னொரு பெண்ணை ஏற்பாடு செய்துகொடுக்கும் காட்சிகள் என எல்லாவற்றிலும் வெவ்வேறு விதமான முகபாவனையுடன் அழகாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆர்யா நட்புக்காக ஒரு காட்சியில் வந்து போகிறார்.விடிவி கணேஷ் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். பலன் தான் இல்லை! மில்லியனராக வரும் வம்சி கிருஷ்ணா ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருக்கிறார். பூனம்பாஜ்வா வந்து போகிறார். . இயக்குனர் லக்ஷமன் கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்!ஜெயம் ரவியை வெறுப்பதற்கு பல காட்சிகளை வைத்துள்ள இயக்குனர் ஜெயம் ரவி மீது மீண்டும் காதல் வருவதற்கு வலுவான சில காட்சிகளை வைத்து இருக்கலாம்.
டி.இமான் இசையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘டண்டணக்கா’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. . வைக்கம் விஜயலட்சுமி பாடிய ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி ’ பாடல் நல்ல கருத்துள்ள பாடலாக அமைந்துள்ளது. பின்னணி இசையும் ஓ.கே.தான்.படத்திற்கு மற்றொரு பெரிய பலம் சவுந்தரராஜனின் ஒளிப்பதிவுதான். என்ன இருந்து, என்ன பயன் ? மொத்தத்தில் ‘ரோமியோ ஜூலியட்’ என்ற அழகான காதல் ஜோடிகளை காணவில்லையே என்ற ஏக்கமே, திரையரங்கை விட்டு வெளியேறும் போது.நமக்கு மிஞ்சுகிறது!