தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிற ஒரே நடிகை நயன்தாராதான்.
சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக எத்தனையோ நடிகைகள் நடித்திருக்கிறார்கள். பல நடிகைகள் தனித்த ஹீரோயின் தகுதி பெற்றிருந்தாலும் அவர்களால் நடிகர்களின் இணை இன்றி வெற்றி பெற முடியவில்லை.
ஆனால் நயன்தாராவினால் மட்டுமே ‘அறம்’ படம் வெற்றி பெற்றது. வேறு நடிகைகள் யார் நடித்திருந்தாலும் அந்தப்படம் பெரு வெற்றியைத் தொட்டிருக்காது. .
அமெரிக்காவில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என விஸ்வரூபம் 2,தானா சேர்ந்த கூட்டம், காலா ஆகிய மூன்று படம்தான் வெற்றி பெற்றுள்ளன.அந்த வரிசையில் இப்போது கோல மாவும் சேர்ந்திருக்கிறது. நயன்தாராவுக்காக அந்த படம் ஹிட் அடித்திருக்கிறது.