என்னை அறிந்தால் படத்தைத் தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் அஜீத். இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமிமேனனும் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.. . இப்படத்தின் மூலம் இந்தி வில்லன் கபீர் சிங்.தமிழ் சினிமாவிலும் வில்லனாக அறிமுகமாகிறார் தற்போது அஜித் மற்றும் கபீர் சிங் சம்பந்தப் பட்ட காட்சிகள் படமாக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில், அஜித் குறித்து கபீர் சிங் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது :-அஜித்திடம் பழகி பார்த்தால் தான் தெரிகிறது, அவர் ஒரு ஜென்டில்மேன், அற்புதமான மனிதர், வைரம் போன்றவர்.நிஜ வாழ்க்கையில் ஹீரோ, ஒழுக்கத்தின் மறு உருவம், உதவுவதில் சிறந்தவர். அஜித்தை பொருத்தவரை இயக்குனர், கேமராமேன், லைட்மேன் என அனைவரையும் சமமாகப் பார்க்கக் கூடியவர்.அஜித் கோலிவுட்டின் பெரிய நடிகர் மட்டுமல்ல கோலிவுட்டின் கடவுளாகவும் திகழ்கிறார். தமிழ் சினிமாவில் பெரிய படத்தில் சிறந்த அறிமுகம் கொடுத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என அஜித்தே வெட்கப்படும் அளவிற்கு அவரை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்