அஜித்தின் அடுத்த படத்தை சுசீந்திரன் இயக்க இருக்கிறார் என்றும் வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இது குறித்து இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது,, அஜித் சார் படம் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவருடன் பணிபுரிய விரும்புகிறேன், அவ்வாறு நடைபெற்றால் உங்களுடன் முதலில் பகிர்ந்துகொள்கிறேன் என்று தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்