தமிழர்களின் வீரவிளையாட்டு என கருதப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது எல்லோருக்கும் தெரிந்தது தான்! இந்த தடையை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்து அரசிதழில் ஆணை வெளியிட மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் வரவேற்று அறிக்கையும் வெளியிட்டுள்ளார்..இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, சரத் குமார் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து “ஜல்லிக்கட்டுக்கான தடையை நீட்டிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கும்படி என்னுடைய ரசிகர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும். காளைகளை காப்பாற்றுங்கள் என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.சோனாக்ஷி சின்ஹாவின் கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் சரத்குமார் ரசிகர்கள் மற்றும் பெரும்பாலானோர் கடும் கண்டனம் தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.