உலகம் அறிந்த அந்த இந்திய நடிகரின் மிகப்பெரிய சொத்து விலை பேசப்படுகிறது. பெரும்பான்மையான நடிக,நடிகையருக்கு தாய்வீடு மாதிரி ஆர்.கே.ஸ்டுடியோ. மாபெரும் கலைஞர் ராஜ்கபூரின் கலைக்கூடம்.
.இரண்டு ஏக்கர் பரப்பளவில் இருக்கிற இந்தப் படப்பிடிப்பு நிலையம் திடீரென தீப்பற்றி பெரும் விபத்துக்குள்ளாகியது.
அதன் பிறகு ராசி இல்லாத இடமாகிப் போனது. இதனால் அந்த இடத்தை விற்பதற்கு ராஜ்கபூரின் பிள்ளைகள் முடிவு செய்திருக்கிறார்கள்
.குறைந்த பட்சம் 5௦௦ கோடிக்கு விற்பனை ஆகலாம் என எதிர்பார்க்கிறார்கள். கூறு போட்டு பிளாட்டாக விற்றாலும் இன்னும் அதிக விலைக்கு போகும் என்கிறார்கள்
. வாரிசுகள் என்ன நினைக்கிறார்களோ?