மியாட் மருத்துவமனையில் கேப்டன் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதும் டுவிட்டர்,பேஸ்புக் ,புண்ணியமூர்த்திகள் பலர் சொந்தமாக கேப்டனைப் பற்றி ‘புலனாய்வு'( ! ) நடத்தி கதை விட்டிருந்தார்கள்.
அதைப் படித்த கேப்டனின் மகன் விஜய பிரபாகரன் வீடியோ வழியாக கோரிக்கை விடுத்திருக்கிறார். “அப்பா நலமாக இருக்கிறார்.ராஜா மாதிரி இருக்கிறார்.அவருக்கு சீரியசாக இருந்தால் நான் வேலை விஷயமாக நெல்லூர் சென்று இருக்க முடியுமா?
தேவை இல்லாமல் தவறான தகவலை பரப்பி விடுவதால் உங்களுக்கு என்ன நன்மை?
படுக்கையில் கிடப்பதாக இஷ்டத்துக்கு பேசி வருவது வேதனை அளிக்கிறது. என் அப்பாவை இப்படியெல்லாம் சொல்வதால் எனக்கு எப்படி வலிக்கும் என்பது தெரியாதா?
உங்கள் வீட்டில் இப்படி யாருக்காவது இந்த நிலை ஏற்பட்டால் இப்படித்தான் பேசுவீர்களா? அவரவருக்கு வேலைகள் இருக்கும்.அதை கவனியுங்கள்!”என விஜய் பிரபாகரன் கூறி இருக்கிறார்.