பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சிம்புவை கதாநாயகனாக வைத்து `அரசன்’ என்ற திரைப் படத்தை தயாரிக்க முடிவு செய்தது. அதற்கு ரூ.1 கோடி சம்பளம் பேசி முன் பணமாக 50 லட்சத்தை சிம்புவிடம்,கடந்த 2013 ஜூன் மாதம் 17ம் தேதி கொடுத்துள்ளது. ஆனால்,போட்ட ஒப்பந்தத்தின் படி சிம்பு , அரசன் படத்தில் நடிக்க வராமல் வேண்டுமென்றே இழுத்தடித்ததாகவும், இதன் காரணமாக பேஷன் மூவி மேக்கர்ஸ் படநிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறி அதன் உரிமையாளர் நடிகர் சிம்பு மீது வழக்கு தொடுத்தார்.இது குறித்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு மீதான இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் சிம்பு வாங்கிய ரூ.50 லட்சம் அட்வான்ஸ் தொகையை ,வட்டியுடன் சேர்த்துரூ. 85.50 லட்சம் ரூபாயை நான்கு வாரங்களுக்குள் பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்.இதற்கு நான்கு வாரகாலத்துக்குள் செக்யூரிட்டியாவது கொடுக்க வேண்டும்.குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை தரவில்லை என்றால், நடிகர் சிம்பு வின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். சிம்பு பயன்படுத்தும் கார், மொபைல்போன், பிரிட்ஜ் , டி.வி., வாஷிங்மெஷின், கட்டில், ஷோபா செட், மின் விசிறிகள், கிரைண்டர், மிக்ஸி, ஏர்கண்டிஷனர், டைனிங் டேபிள், சேர்கள் ஆகிய யாவும் பறிமுதல் செய்யப்படும் என்றுநீதிபதி கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார்.