கருவாடுக்கு ஆசைப்பட்டு கூண்டுக்குள்ள சிக்கிவிட்ட எலியின் கதை மாதிரி ஆகி இருக்கிறது அருண் விஜய் விட்ட டிவிட். சீமைக்கேத்த மவராசன் பட்டு தலைப்பாகை கட்டிக்கிறான். அருண் விஜய்க்கு ஏன் வலி?
சீமைராஜாவின் முன்னோட்ட விழா கடலோர நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடந்தது. இதுவரை எவருமே நடத்தியிராத அளவுக்கு தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா நடத்திக் காட்டி இருக்கிறார் என்பது பெருமைக்குரிய ஒன்று.பொறாமைப்படுவதென்றால் அவர் வேறொரு தயாரிப்பாளராக இருந்திருக்க வேண்டும் .
கருடனின் நிழல்பட்டாலே சுருண்டுவிடும் சுண்டெலிக்கு எதற்கு வரவேண்டும் பொறாமை?
சிவகார்த்திகேயன் மாஸ் நடிகரா, இல்லையா என்பதை அவரை வைத்துப் படம் எடுத்தவர்களிடம் கேட்டிருக்கவேண்டும். லாபம் சம்பாதித்த தியேட்டர் அதிபர்களிடம் கூட கேட்கலாம். அவர் மாஸா, இல்லையா என்பதை மதுரையில் காட்டிவிட்டாரே? இதற்குப் பிறகும் அருண் விஜய்க்கு எதற்கு டவுட்?
“யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு வெவஸ்த இல்லாம போச்சு?…தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். சப்போர்ட் ட்ரு டாலண்ட் ஹை டைம்.”
என்பதாக நள்ளிரவில் ட்விட் போட்டிருந்தார். சற்று நேரத்தில் ஹாக் செய்யப்பட்டதாக ஒரு அறிவிப்பு. இது தப்பு செய்தவர்கள் தப்பித்துக் கொள்ளும் வழிகளில் ஒன்று.
பின்னர் என்ன நடந்ததோ…
“டேய் …அத நான்தான் போட்டேன்.என்ன இப்போ?”
அருண் விஜய் மறு டிவீட்!
சிவனேன்னு படுத்துக் கிடக்கிற சிறுத்தையை சீண்டுவானேன், அது சீறி பாய்ந்து புடுங்குவானேன் என்று கிளம்பிவிட்டார்கள் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள். ஆனால் விழாவின் நாயகன் சிவகார்த்திகேயன் யாரையும் ,காயவோ, ஜாடையாகவோ கூட திட்டவில்லை.
” எனக்கு யாரை பார்த்தும் போட்டி இல்ல. பயம் இல்ல. பொறாமை இல்ல. நான் என் வழியில் போயிட்டிருக்கேன்.மற்ற நடிகர் எங்க இருக்காங்களோ , அங்கதான் நானும் இருக்கேன். பாகுபலி படம் மாதிரி ஒரு படம் நடிக்கனும்னு ஆசை. சீமராஜா வில் தமிழ் ராஜாவா நடிச்சது பெருமை!” என்பதாக பேசி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் மாஸ் ஹீரோவாக இருப்பதால் யாருக்கு நட்டம்? எந்த நடிகர் இவரைத் தூண்டி விடுகிறார்? அல்லது நன்றியைக் காட்டுவதற்காக இப்படியெல்லாம் அருண்விஜய் செய்கிறாரா?
வீண் வேலை!