பொன் ராம் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ்,ராஜ்கிரண் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் ‘ரஜினி முருகன்’ ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று இரவு ஹோட்டல் தாஜில் நடந்தது. இதில் மைக்கைப் பிடித்த சிவ கார்த்திகேயன் இந்த படம் கமிட் ஆன போது ,என்னிடமும்,இயக்குனர் பொன்ராமிடமும் சிலர் அவர் படத்திலா நடிக்கப்போறீங்க பொழைக்கிற வழியை பாருங்க வேற தயாரிப்பாளரை பாருங்க வளர்ற நேரத்துல உங்களுக்கு எதுக்கு வேண்டாத வேலை!படம் நின்னுடும்.என்றெல்லாம் கொளுத்தி போட்டனர். ஆனால் நாங்கள் ஒரு மனிதன் கஷ்டத்தில் இருக்கும் போது தான் உதவனும் என முடிவெடுத்தோம் இதோ படம் எங்க கண்ணு முன்னாடி வளர்ந்து நிக்குது ! இந்த படம் சம்பாதிக்கிற லாபத்துல்ல லிங்கு சாமி பிரச்சணை எல்லாம் தீர்ந்து விடும் என்றார். இதையடுத்து , பொதுவாக எந்த சினிமா விழாவிலும் அதிர்ந்து கூட பேசாத இப்படத் தயாரிப்பாளர் லிங்கு சாமி பொங்கி விட்டார். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளில் உள்ள நிஜம் விழாவிற்கு வந்திருந்தவர்களை அப்படியே கட்டிப்போட்டது! ஆரம்பமே ,அவரின் மன வலியை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது., ‘இந்த சினிமா இன்டஸ்ரியில் நிறைய உத்தம வில்லன்கள் இருப்பாங்க. அவங்களை இனம் கண்டுக்கலேன்னா நம்மளை காணாமல் அடிச்சுருவாங்க’ என்று தொடங்கிய லிங்குசாமி,தொடர்ந்து,
நான் ரஜினி முருகன் யூனிட்ல வேலை பார்த்த உதவி இயக்குனர்கள் முதல்,, சிவகார்த்தியேன் வரை ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியே நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கேன்! சம்பளம் வந்துச்சா, வரலையாங்கிற எந்த வருத்தமும் இல்லாம விட்டுக் கொடுத்து வேலை பார்த்திருக்காங்க. இந்த படத்தை ஆரம்பிக்கும் போதே, லிங்குசாமி நிலைமை சரியில்ல. இந்த படத்தை அவர் பேனர்ல பண்ணாதீங்கன்னு சிவகார்த்திகேயனிடம் சொல்லியிருக்காங்க. ஷுட்டிங் நடக்காதுன்னு சொன்னவங்களோட வார்த்தைகளை முறியடிச்சு இன்னைக்கு படத்தை முடிச்சுட்டோம். இப்போ ரிலீஸ் பண்ண முடியாதுன்னு சொல்றாங்க. அதையும் முறியடிப்போம்.
ரஜினி முருகன் இன்னொரு எம்ஜிஆர்னு சொன்னவங்களுக்கு சொல்றேன். சிவகார்த்திகேயனை நாங்க ரஜினி இடத்துல வைச்சு பார்க்கதான் ஆசைப்பட்டோம். ஆனால், நீங்க அதைவிட பெரிய இடத்தை கொடுக்க ஆசைப்படுறீங்க. சந்தோஷம். இந்த படத்தை திட்டமிட்டபடி சொன்ன தேதிக்கு . என் சொத்துக்களை விற்றாவது இந்த படத்தை நான் ரிலீஸ் பண்ணுவேன். நான் கும்பகோணத்துலேயிருந்து கிளம்பி வரும்போது வெறுங்கையோடுதான் வந்தேன். ஆர்.பி சவுத்ரி ஆபிஸ்ல போய் நின்னேன் ஆனந்தம் படம் உருவாச்சு ! தொடர்நது படங்கள் தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறேன்.இன்னும் ஜெயிப்பேன். அந்த நம்பிக்கை இன்னும் எங்கிட்ட அப்படியே இருக்கு. ஒரு படத்தின் வெற்றி அந்த பட போஸ்டர்களிலேயே தெரிந்து விடும். ரஜினி முருகன் போஸ்டர்களையும், அது தர்ற பாசிட்டிவ் எனர்ஜியினையும் பார்க்கும் போது என் கஷ்டத்தையெல்லாம் அது தீர்த்து வைக்கும்னு நம்பிக்கை இருக்கு. அஜீத்தை வச்சு ‘ஜி’ ங்கிற பிளாப் படத்தை கொடுத்த பிறகுதான் சண்டைக்கோழின்னு வெற்றிப்படத்தை பண்ணினேன்.இப்ப சண்டைக்கோழி இரண்டாம் பாகம் எடுக்கப்போகிறேன்.அதிலும் இங்கே அமர்ந்திருக்கிற ராஜ்கிரண் முதல் என் கஷ்டத்தில் பங்கெடுத்துள்ள அத்தனை பேரும் இருக்காங்க ,
பீமாங்கிற தோல்விபடத்துக்கு பிறகுதான்’ பையா’ங்கிற வெற்றிப்படத்தை கொடுத்தேன். ஒவ்வொரு முறையும் சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டிதான் ஜெயிச்சுருக்கேன். நிச்சயம் ரஜினிமுருகன் விஷயத்துல எனக்கு ஏற்பட்ட சோதனையையும் கடந்து வெல்லுவேன் என்றார் லிங்குசாமி ஆவேசத்தோடு. லிங்கு வை உசுப்பி விட்டது யாருய்யா! என்பதே விழாவிற்கு வந்திருந்த பலரின் கேள்வி!