நாலு பேரு கவனிக்கனும்னா நல்லவனைக் கூட கெட்ட பயன்னு சொன்னால்தான் அரசியலில் அனல் பறக்குது. சினிமாவுக்கு கூடுதலா காண்டர்வர்சியை கிளப்புனம்னா அது ஒரு விளம்பரம்னு நம்புறாங்க.
சமந்தா நடித்திருக்கிற பிரமாண்டப்படமான தமிழ் ‘சீமராஜா’ தெலுங்கில் ‘ யூ டர்ன்’ இரண்டும் இந்த மாதம் 13 ம் தேதி ரிலீஸ். அதே நாளில் அம்மிணியின் ஆத்துக்காரர் நாக சைதன்யா நடித்திருக்கிற படமும் ரிலீஸ் ஆகுது.
“இப்படி மூணு படமும் ஒரே நாளில் ரிலீஸ் பண்ணனுமா, யூ டர்ன் படத்தை தள்ளி வைக்கலாமேன்னு” என்று டைரக்டர் பவன் குமாரிடம் சமந்தா சொல்ல, அவர் கேட்கல. தயாரிப்பாளரும் ஏன் தள்ளி வைக்கனும்னு அடம்.
“ரெண்டு பேரும் காண்டர்வர்சியை கிரியேட் பண்ணனும்னு நினைக்கிறாங்க. என்ன பண்ணமுடியும்” என்று புலம்புகிறார் சமந்தா.
விட்டுக் கொடுத்தா கெட்டுப் போகமாட்டே சார்! புரிஞ்சிக்கோ.!