அடிவாங்கிய பின்னர்தான் நம்மை அடிமைகளாக மாற்றப் பார்க்கிறார்கள் என்பது புரியும் போல! இரண்டு தடவை கலைஞர் மறைவைத் தொடர்ந்து சென்னைக்கு வந்து போனவர் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகரராவ். தமிழர்களின் எழுச்சியும் உணர்ச்சியும் அவரது மனதை மிகவும் மாற்றி விட்டது போலும்!
“டெல்லி சாம்ராஜ்யம் ‘மீண்டும் வருமேயானால் அவமானங்களைத் தாங்கியாக வேண்டும். தமிழக மக்களைப் போல நம்மை நாமே ஆண்டு கொள்ளவேண்டும். தமிழக மக்கள் தேசியக் கட்சிகளை புறம் தள்ளிவிட்டார்கள். அந்த கட்சிகளை தங்களை ஆள்வதற்கு அனுமதிப்பதில்லை.சுயமரியாதையுடன் இருக்கிறார்கள். அவர்களைப் போல தெலங்கானா மக்களும் வாழவேண்டும் ” என்பதாகப் பேசி இருக்கிறார். மோடியுடன் நெருங்கிய நட்பு வைத்திருந்தவர் இப்படி பேசி இருப்பது பிஜேபியினரை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.