சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ். இவரது மனைவி கலாவதி . வயது 72 .
இவர்களுக்கு ராமகிருஷ்ணன், மகாதேவன், பாண்டுரங்கன் என்று மூன்று மகன்களும் ,ராதாபாய் என்கிற மகளும் இருக்கிறார்கள். ரஜினியின் அத்தாச்சி கலாவதிக்கு நீண்ட நாட்களாக சிறுநீரக தொல்லையும் சர்க்கரை நோயும் இருந்து வந்தது. நேற்று இரவு கடுமையான சுவாச பிரச்னை. உடனடியாக பெங்களூரு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் பயன் இல்லை. மாரடைப்பு ஏற்பட்டு இரவு 11 மணிக்கு மரணம் அடைந்தார். தகவல் அறிந்த ரஜினிகாந்த் இன்று காலை குடும்பத்துடன் ஜெட் ஏர்வேசில் புறப்பட்டு சென்றிருக்கிறார். ரஜினியை வளர்த்து ஆளாக்கியது கலாவதிதான் என்பது குறிப்பிடத் தகுந்தது.