நாள் நட்சத்திரம் பார்த்து ,அக்கினி வலம் வந்து அருந்ததியை எட்டிப் பார்த்து தாலி கட்டிக்கிற புருஷன் பொண்டாட்டிக்குள்ள பர்ஸ்ட் நைட்டிலேயே பைட் நடக்கிற காலம்.
நாலாயிரம் மனசோடு இருக்கிற நடிகர் சங்கத்தில சண்டை வராம இருக்குமா?
வந்திருச்சி!
அமெரிக்காவில திரட்டிய நிதியை சங்கத் தலைவர் சிவாஜிராஜா தவறாக பயன்படுத்தி விட்டாராம். இது பற்றி நடிகர் நரேஷ்க்கும் தலைவருக்கும் சண்டை. சிவாஜிராஜாவை தூக்கணும்னு பெரிய குருப் வேலை பார்க்கிது. இந்த சமயத்தில் இரண்டு பேருக்கும் வாய்ச்சண்டை. வேற வழி இல்லாமல் சிரஞ்சீவி தலையிட்டு இருவரையும் கடுமையாக எச்சரித்திருக்கிறார். அங்கே புயல் அடிக்கும்னு எதிர்பார்ப்பு.!