‘ஈ’ படத்திற்கு பின் ஜீவா, நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்து வரும் “திருநாள்” படத்தின் படப்பிடிப்பு, கும்பகோணம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக ஜீவா நடித்து வரும் இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை நயன்தாரா, இப்படத்திலேயே கிராமத்து பெண்ணாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
காமெடியுடன் காதலும், ஆக்ஷனும் கலந்த இப்படத்திற்காக கும்பகோணத்தில் மிகுந்த பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் தினமும் ஆயிரம் துணைநடிகர்கள் நடிக்க, படத்தின் முக்கிய காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன. கோதண்டபாணி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.செந்தில்குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார்./