“பாசிச பாஜக ஒழிக” என தூத்துக்குடி சென்ற விமானத்தில் ரிசர்ச் ஸ்டூடன்ட் சோபியா குரல் எழுப்பியது குற்றமெனக் கூறி போலீஸ் கைது செய்தது. அதே விமானத்தில் பயணம் செய்த தமிழிசை சவுந்திரராஜன் தமிழக மாணவிசோபியாவுக்கு எதிராக புகார் செய்திருந்தார், இவரது செயலுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. மாணவியும் ஜாமீனில் வெளிவந்தாச்சு.
அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.
“பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.” என்பதாக கூறி இருக்கிறார்.
ஆனால் இவ்வாறு சோபியாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சொன்னவர்களை காயத்ரி ரகுராம் கடுமையாக தாக்கி இருக்கிறார். முன்னொரு சமயம் இவர் பாஜகவில் இருப்பதாக தெரிவித்திருந்தார், தற்போது அவரது நிலைப்பாடு என்னவென தெரியவில்லை.
அவர் சொல்லியிருக்கிற கருத்துகள்:
“படித்த பெண் ஒரு விமானத்தில் இதுபோன்று அநாகரீகமாக நடந்து கொள்ள வாய்ப்பில்லை.ஒருநாள் பரபரப்புக்காக ,புகழ் பெறுவதற்காக சோபியா அவ்வாறு நடந்திருக்கிறார். இது போன்று துபாய் ,கனடா ஆகிய நாடுகளின் விமானத்தில் நடந்தால் தண்டனையே வேறு!சோபியாவுக்கு ஆதரவு தருகிறவர்கள் வெட்கித் தலை குனியவேண்டும்.” என்பதாக சொல்லி இருக்கிறார்.