திருட்டுக் காதலில்தான் திரில்லிங் அதிகம். யாருக்கும் தெரியாமல் போனில் பேசுவதும், ரகசிய பெயர்களில் காதல் கடிதங்களைப் பரிமாறிக் கொள்வதிலும் ….அட அவ்வளவு ஏன் சாமியை கும்பிட கோவிலுக்குப் போனால் கடவுளையா கண் தேடுது, காதலியை அல்லவா!
இப்படியெல்லாம் ஊருக்குத் தெரியாமல் காதலிப்பதிலும் லாபம் இருக்கிறது. புட்டுக்கிச்சினா எந்த சைடுக்கும் சேதமில்லாமல் கற்பைக் காப்பாற்றிக் கொண்டதாக காட்டிக் கொள்ளலாம் அல்லவா? இந்த ‘கற்பு நிலை ‘ அரசியலுக்கும் பொருந்துகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகர் தனது அரசியல் வளர்ச்சி குறித்து ஆளும்கட்சியின் ஜீவனான தலைவரை சந்தித்துப் பேசி இருக்கிறார். தற்போதைய சந்திப்பு ஆறாவது தடவை என்கிறார்கள் அரசியல் வட்டத்தில்!
எத்தனை தடவை என்றாலும் என்ன, ஐக்கியமா, அல்லது சார்பு நிலையா என்பது நாட்டு மக்களுக்கு ஓரளவுக்காவது புரிந்திருக்கும்.
தமிழர்க்கு சார்பான பிரச்னைகளில் கருத்துச் சொல்ல மறுத்திருப்பது கூட சாயம் கலந்த மாதிரி இருக்கிறதே!