மாற்றுத் திறனாளிகளை பார்த்தால் நம்மையறியாமலேயே ஒருவகையான இரக்கம் சுரக்கும். அத்தகைய இரக்கம் இருப்பதினாலேயே என்னவோ நாம் ஊனப்படும்போது பரிதாபத்துக்கு உரியவர்களாகி விட்டோமே என்கிற வேதனை உறுத்தும். அப்படித்தான் நடிகை அதாசர்மாவும் கவலைப்படுகிறார்.
கார் கதவை படார் என சாத்தும் போது கை சுண்டு விரல் கட் ஆகிவிட்டது. நல்ல வேளை துண்டான சுண்டு விரல் காரிலேயே தொங்கி கொண்டிருந்ததால் அதை முறைப்படி ஒரு பையில் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டார். துண்டிக்கப்பட்ட விரலை ஓட்ட வைத்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். அதா சர்மாவுக்கு ஒரு டவுட்டு. முன்னைப்போல நம்மை ரசிகர்கள் ரசிப்பார்களா ?
“ஒன்பது விரல்தான் எனக்கு! இப்பவும் என்னை நேசிக்கிறீர்களா?” என கேட்டிருக்கிறார் போட்டோவுடன்!
“அய்யோ….பாவமே” என வருந்தி இருக்கிறார் நடிகை லட்சிமி மஞ்சு.