“என்னய்யா நடக்குதுன்னு” திரும்பிப் பார்க்கிறதுக்குள்ள “இந்தா இது புது ஊழல்!” என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மூட்டையை அவிழ்க்கிறார்.
அதைப் பார்க்கிறதுக்குள்ள “மந்திரிகள் வீட்டில் சிபிஐ ரெய்டு” என்கிறது மாலைச்செய்தி.
நாமென்னா ஊழல் நாட்டுலயா வாழ்றோம் என்கிற கேள்வி குடைகிறது. ஆனா அதுவே பழக்கமாகிப் போகும்னு நினைக்கல!
இந்த குட்கா ஊழல் இன்னும் எத்தனை காலம் இழுத்தடிக்குமோ தெரியல. இந்த சி.பி.ஐ. ஆபீசர்களுக்கு அலுப்புத் தட்டாதா? அவங்களும் அறிக்கை கொடுக்கிறாங்க. அரசாங்கமும் வாங்கி வச்சிக்கிது. மக்களைப் பத்தி நினைக்கவே மாட்டாங்களா? இவங்க என்ன மண்ணுளிப் பாம்புகளா?
ஆனால் நிறைய செய்திகள் கேள்விப்படுகிற கட்டத்திலேயே இருக்கு.
“நான் ஏன் ராஜினாமா செய்யணும்? ரெய்டு நடந்தாலே நான் குற்றவாளி ஆகிடுவேனா? உங்க மகன் சம்பந்தி வீட்டிலும் ரெய்டு. நீங்க ராஜினாமா பண்ணிட்டீங்களா ? ஓபிஎஸ்க்கு எதிராகவும் வழக்கு இருக்கு அவர் ராஜினாமா பண்ணிட்டாரா?” என்று முதல்வர் எடப்பாடியாரை பார்த்து அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டாராம். இப்படியெல்லாம் ஜெயலலிதாவிடம் கேட்டிருக்க முடியுமா?
நாட்டையே உலுக்கி எடுக்கிறது குட்கா ஊழல். முன்னாள் மந்திரி ரமணா, காவல்துறை உயர் அதிகாரி டி.ஜி.பி.யான . டி.கே.ராஜேந்திரன்,முன்னாள் டி.ஜி.பி. ஜார்ஜ் ஆகியோர் வீடுகளிலும் சி பி.ஐ ரெய்டு நடந்திருக்கிறது,
ஆனால் முடிவு என்னாகும்?