கமல்ஹாசன் மீண்டும் இரட்டை வேட நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள படம் இந்தியன்-2. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இதில் நயன்தாரா, அஜய்தேவ்கன் உள்ளிட்ட பலர் நடிக்க வுள்ளதாக கூறப்படும் நிலையில்,இந்தியன் முதல் பாகத்தில் நடித்த நெடுமுடி வேனுவும் இப்படத்தில் இணையவுள்ளாராம். இந்தியன் படத்தில் கமலை துரத்தும் சி.பி ஐ அதிகாரியாக நடித்த நெடுமுடி வேனுவே ,இரண்டாம் பாகத்திலும் அதே கேரக்டரை தொடரவுள்ளாராம்.