“சீனாக்காரன் பூச்சி பொட்டெல்லாம் சாப்பிடுறான். நம்ம ஊர்ல எக்கச்சக்கமாக கரப்பான் பூச்சி கிடைக்கிறது. அதை வறுத்து சாப்பிடு” என்று பிஜேபி அரசு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அந்த அளவுக்கு மக்களை முட்டாளாக்கி வருகிறார்கள். இதுவரை சுதந்திர இந்தியாவில் இந்த அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததில்லை என்று சொல்லுமளவுக்கு ரூ.100 ஐ தொட்டு விடும் போல் இருக்கிறது.
மாட்டு வண்டி காலத்துக்கு நம்மை கொண்டு போய் விடுவார்களோ என்று மக்கள் பயந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மந்திரி ராஜ்குமார் ரின்வா நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி சொல்லி இருக்கிறார்.
“பெட்ரோல் விலை ஏன் உயர்ந்தது என்பது மக்களுக்கு புரியவில்லை.வீட்டுச்செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பெட்ரோல் விலைய ஏற்றுக் கொள்ளுங்கள்”
பாரதி இன்று உனது நாள் .
“சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்!”