முன்னணி நடிகர்கள் அனைவர்க்கும் பொதுவான ஒரு கொள்கை இருந்துவருகிறது. தங்கள் குடும்பத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதில்லை. அவர்கள் மீது தனது பிம்பத்தின் பாதிப்பு பதிவாகி விடக்கூடாது என்பதில் கவனம் எடுத்துக் கொள்வார்கள்.
விஜயசேதுபதிக்கும் பயம் இருக்கிறது.
“விஜய்சேதுபதி,நடிகன் என்பதெல்லாம் என் அப்பாவுக்குச் சொந்தம் என்பதை என் பிள்ளைகளிடம் சொல்லி விடுவேன். என்னையே இந்த ‘புகழ்’ கெடுத்து விடுமோ என்கிற பயமும் உண்டு.அப்பாவாச்சே…அதான் பொறுப்பா இருக்கேன் ” என்கிறார்.
நியாயம்தான் !