‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து சூர்யா – கே.வி.ஆனந்த் இருவரும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த கூட்டணி தமிழக ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,இப்படத்தின் படப்பிடிப்பில்ரசிகர்கள் எடுத்த சூர்யாவின் புதிய கெட்டப் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது.