டைரக்டர் செந்தில்நாதனுக்கு சாலிகிராமத்தில் சிலுக்கு வீட்டுக்கு அருகில்தான் வீடு.பிரசாத் ஸ்டுடியோ பக்கம். பிரபலமான டைரக்டர். சினிமா பாரம்பரியமான குடும்பம். வசதியானவர் .
தற்போது அம்பிகாவுக்கு அடங்கிய கணவராக நாயகி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜாலியான மனிதர். நம்மைப் பார்த்ததுமே “என்ன சார் …பிச்சை எடுக்கிறேனா என்பதை பாக்க வந்தீங்களா” எனக் கேட்டு சிரிக்கிறார்.
“ரெண்டு பேருக்கு மத்தியில தொழில் போட்டின்னா அவங்க போட்டிக்கு நான் தீனி ஆக முடியுமா? அந்த டி.வி.யை சேர்ந்தவங்க மத்தவங்களைத் தூண்டிவிட்டு இப்படி பொய்யா எழுத வைக்கிறாங்க. ஒரு மாலைப் பத்திரிகையிலும் செய்தி வந்திருக்கு. உடனே அந்த பத்திரிக்கை தொடர்புள்ள காலைப் பத்திரிகை நிருபருக்கு போன் பண்ணி ‘என்னண்ணே,இப்படி வந்திருக்கு’ன்னு வருத்தப்பட்டேன். என் குடும்பம் எப்படிப்பட்டதுன்னு எல்லாருக்குமே தெரியும். என்னை ஒரு வார்த்தை போனில் கேட்டிருக்கலாமே?தற்கொலை பண்ணிக்கப் போறதா வேற எழுதுறாங்க.” என ரொம்பவே வருத்தப்பட்டார்.
மகன் கல்யாணத்தில் சந்திரசேகருடன் கை குலுக்கும் செந்தில்நாதனை பாருங்கள் படத்தில்!