அழகான, அட்டகாசமான பல திறமையான நடிகைகளை தந்த பஞ்சாபிலிருந்து மேலும் ஒரு அழகி தமிழில் அறிமுகம் ஆகிறார். ‘வருடு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த பானுஸ்ரீ தமிழில் தனது முதல் படத்தில் பரத் உடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.தனது சினிமா பிரவேசத்தை பற்றி பானுஸ்ரீ மெஹ்ரா கூறும்பொழுது “ தெஹ்ராதூணில் மேல்நிலை கல்வியை முடித்து மும்பையில் மாஸ் மீடியா பட்டபடிப்பு மேற்க் கொண்டு வந்த நேரத்தில் மாடலிங் ஆரம்பித்தேன் பின் பல விளம்பரங்களில் நடித்து வந்தான். இதன் மூலகமாவே ‘ வருடு’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது.” எனக் கூறினார்.“ முதல் படத்திற்கு பின் தாய் மொழியான பஞ்சாபியில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறேன். தற்பொழுது தமிழில் அறிமுகமாவது மகிழ்ச்சியாகவுள்ளது. இப்படத்தில் நான் ஒரு செய்தி வாசிப்பாளராக வருகிறேன். மிகவும் தைரியாமான பெண்ணாக வருகிறேன்.படபிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளது. “
“ பிரபல பெண் பத்திரிக்கையாளர் பர்க்கா தத் எனது ரோல் மாடலாக எடுத்து நடிக்கிறேன். இன்றைய பத்திரிக்கைத் துறையில் வேலை செய்யும் அனைத்து மகளிருக்கும் எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.” என்கிறார் பானுஸ்ரீமெஹ்ரா .