எங்கேயோ விழ வேண்டிய இடி இங்கே வந்து விழணும்னு விதியா என்ன …இம்சை அரசனைப் பார்த்து ஒரு இடி. டம்மி பீசை நோக்கி இன்னொரு இடி!
எவ்ளோவ் பெரிய இடம் ஷங்கர். அங்கேயே கை வைக்கிறார்னா எவ்வளவு தில்லான ஆளு வைகைப் புயல் வடிவேலு.
படம் நடிச்சுக் கொடுக்கிறேன்னு சொல்லி சிம்புதேவன் டைரக்சன்ல நடிக்க வந்தார் இம்சை அரசன் வடிவேலு. பிரச்னை தொங்கல் விட ஆரம்பிச்சது. பஞ்சாயத்து பல தடவை நடந்து இப்ப ரெட் போட்டாச்சு.
மனோபாலான்னாலே இப்ப சில நடிகர்கள் தெறிச்சி ஓடுறாங்க.சதுரங்க வேட்டை 2 படத்தில் நடித்ததற்கு 1.79 கோடி தனக்கு தரணும்னு சொல்லி அரவிந்தசாமி வழக்குப் போட்டு இருக்கார். பணத்தை கொடு ,படத்த போட்டுக்கன்னு சொல்றார் சாமி. மனோபாலாவோ தாரேன்னு மட்டும் சொல்றாராம்.எப்பங்கிறத மட்டும் சொல்லல.