டார்லிங் படத்தைத் தொடர்ந்து ,ஜிவி பிரகாஷ் நடித்த பென்சில், த்ரிஷா இல்லனா நயன்தாரா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அடுத்த புதிய பட வாய்ப்பும் ஜி.வி.பி யை தேடி வந்துள்ளதாம்.. இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய சங்கர் மற்றும் குணா ஆகியோர் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தில், ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க இருக்கிறார். ஜிவி பிரகாஷின் நண்பர்கள் வெற்றிமாறனும் அட்லியும் இதில் கைகோர்க்கின்றனர். வெற்றிமாறனின் திரைக்கதைக்கு அட்லி வசனம் எழுதவுள்ளார். இப்படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக நந்தகோபால் தயாரிக்கிறார்.