யூ டர்ன் ,சீமராஜா ஆகிய இரண்டு வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார் சமந்தா. நிம்மதியாக விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டைகளை சாப்பிடவிடாமல் செய்து விட்டார்கள் நடிகர் மகேஷ்பாபுவின் ரசிகர்கள். என்றோ வம்பு இழுத்து கலவரம் செய்தது இன்று தனக்கே வரும் என நினைத்திருப்பாரா சமந்தா?
முன்பு ஹீரோவின் பின்னால் ஹீரோயின் தவழ்ந்து செல்வது மாதிரி மகேஷ்பாபுவின் தயாரிப்பாளர்கள் போஸ்டர் விட்டிருந்தார்கள். பொங்கி விட்டார் சமந்தா. பெண்களை இழிவு படுத்துகிறீர்கள் என குரல் விட ஆந்திராவில் பிரச்னை ஆகிவிட்டது
தற்போது கதாநாயகி அனு எம்மானுவேலின் காலில் சமந்தாவில் கணவர் நாக சைதன்யா கிஸ் பண்ணுவது மாதிரி போஸ்டர் விட்டிருக்கிறார்கள்.
இப்போது பொங்கி இருப்பது மகேஷ்பாபுவின் ரசிகர்கள். “என்னம்மா பொங்கல்? இந்த சீனுக்கு என்ன பேரு? ஹீரோவை இழிவு படுத்துவதாக இல்லையா?”என கேட்டு கிண்டல் பண்ணி இருக்கிறார்கள்.