“எனக்கென்ன குறைங்க? நல்லாத்தான் இருக்கேன். போன மாதம் அம்மா தவறிட்டாங்க. எதையோ இழந்தது மாதிரி ஆகிடுச்சு. எனக்கு நல்ல வழிகாட்டியா இருந்தாங்க .என்ன பண்றது?” என பெரு மூச்சு விட்டவர் அடுத்துச் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.
“கிக்பாக்ஸிங் தெரியும். சும்மா இருப்பதை விட எதையாவது கற்றுக் கொள்ளலாமே! இப்ப ஜிம்னாஸ்டிக் கற்றுக் கொண்டு வருகிறேன்.”என்றவரிடம் “இதற்கெல்லாம் காரணம் உங்கள் வாழ்க்கையில் ‘தனிமை’ என்பதுதானா?”
முகம் சுருங்கிவிட்டது.
“நான் எங்கே தனிமையில் இருக்கிறேன்? கணவர் பரத் ,எனது மகன் என்றுதானே இருக்கிறேன். சந்தோஷமா வாழ்கிற என்னை ஏன் சிலுவையில் அறையிறீங்க! வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எங்களுக்குப் பிரிவு என்பதே இல்லை.! ப்ளீஸ் அப்படியெல்லாம் கேட்காதிங்க. எழுதாதீங்க!” என்கிறபோது மெலிதான கோபமும் இருந்தது.