நீங்கள் கர்ப்பம்னு சொல்றாங்களே உண்மையான்னு கேட்டது தப்பாம்மா?
பொது வாழ்க்கைக்கு வந்தவங்க பிரபலமாகிட்டா அவங்களைப் பத்தின ஒவ்வொரு சேதியும் மக்களுக்கு தெரியனும்.
நிர்வாணமா நடிக்கிறது ,அரை,நிர்வாணம் கால் நிர்வாணம் என அளவுகோல் வைத்து நடிப்பது உங்கள் உரிமை. அது ஆபாசமா இல்லையான்னு தீர்மானிக்கிறது சென்சாருக்கு வேலை. அது கடந்து வந்தபிறகு விமர்சிக்கிறது எங்க வேலை.
பாலி வுட் ,கோலிவுட்டில் சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சிப் படங்கள் வெளியிடுவதை நடிகைகள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் பாலிவுட் கவர்ச்சிக்கன்னி நடிகை சலோனி சோப்ரா.
இவர் திருமணம் ஆகாமல் ,கருத்தரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்,கவர்ச்சியின் எல்லை மீறி மேலாடையில்லாமல் தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
சலோனி சோப்ரா கூறியுள்ளதாவது,
“நான் கருத்தரிக்கவில்லை. ஆனால் தத்தெடுக்க விரும்புகிறேன். நீங்கள் கர்ப்பம் ஆகியுள்ளீர்களா என கேட்காதீர்கள்.
அது உங்கள் வேலையல்ல.
எல்லா பெண்களின் வயிறும் சமமாக இருப்பதில்லை. எல்லா ஆண்களுக்கு சிக்ஸ் பேக் இருப்பதில்லை.
சில பெண்களுக்கு வடுக்கள், தழும்புகள் இருக்கிறது.சிலருக்கு பருக்கள் இருக்கிறது. பல பெண்களுக்கு சிறந்த கூந்தல் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு குறை இருக்கிறது. ஆனால் எல்லா பெண்களும் அழகு தான். மற்ற மாடலிங் பெண்ணுடன் ஒப்பிட்டு தான் அழகாக இல்லையென நினைத்து அதிகமாக கவலைப்பட்டால் தன்னம்பிக்கையை இழந்துவிடுவோம்.அற்புதமான பெண்ணை டேக் செய்யுங்கள். நான் அழகா இருக்கேனா ?அதை கவனியுங்கள்!