கல்யாணம் ஆகியும் கதாநாயகியாக தொடர்கின்ற சமந்தாவின் வெற்றி அதிசயமானது. இந்த ஆண்டு ஐந்து படங்களில் நடித்திருந்தார் ,அந்த படங்கள் ஐந்தும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.
விநாயகர் சதுர்த்திக்கு தமிழ்,தெலுங்கு இரு மொழிகளிலும் வந்திருக்கிற யூ டர்ன் வெற்றியை மட்டுமல்ல அற்புதமான பெயரையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது. நயன்தாராவை அடுத்து நடிப்புத் திறமைகளை சிறப்புடன் வளர்த்துக் கொண்டிருக்கிறார் சமந்தா என்கிற பாராட்டு சுலபத்தில் கிடைப்பதல்ல.
அடுத்து வந்த சீமராஜாவில் அவரது சிலம்ப ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. தற்போதைய கதாநாயகிகளில் இவரளவுக்கு சிலம்பம் ஆட யாருமில்லை.