தெலுங்கில்வெளியான ‘மனம்’ படத்தை இயக்கிய விக்ரம் குமார், தற்போது சூர்யாவின் நடிப்பில் “24” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தாத்தா, அப்பா, மகன் என மூன்று வேடங்களில் சூர்யா நடித்து கொண்டிருப்பதாக கூறப்பட்டது.. ஆனால் தற்போது சூர்யா இதில் ‘டுவின்ஸ் பிரதர்கள்’ கேரக்டர்களில்இரட்டை வேடங்களில் நடித்து வருகிறாராம், இவர்களில் ஒருவருக்கு மகனாகவும் மூன்றாவது கேரக்டரில் நடித்து வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால்இது குறித்து படக்குழுவினர், ‘நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்த படம் ஒரு ஆக்சன் அட்வெண்ட்சர் படம் என்றும் இதைத்தவிர தற்போதைக்கு வேறு எதையும் சொல்ல முடியாது’ என்கின்றனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா, அஜய், சத்யன், மோகன் ராமன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது