அழகான பெண்கள் நடந்து போனாலே ஆண்களின் பார்வை அம்பாக பறக்கும். புன்னகைத்தாலோ பூலோகமே தன் கைக்கு வந்து விட்ட பிரமையில் கிறங்கி விடுவார்கள் . இதோ அனு எம்மானுவேல் காதல் திருமணத்தைப் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். எத்தனை பேர் லவ் லெட்டர் எழுதுவார்களோ தெரியாது.
“இரண்டு மனங்களின் இணைப்புத்தான் காதல். அது தூய்மையானதாக இருக்கும். அதனால்தான் நான் லவ் மேரேஜ் பண்ணிக்கொள்ள விரும்புகிறேன். என் மனம் தேடும் மனம் எங்கே இருக்கிறதோ, தெரியவில்லை. நான் போர்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறபோது ஒரு கிரஷ் வந்தது.”என்கிறார்.