‘அவுடதம் ‘ என்கிற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.இப்படத்தை தனது ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் சார்பில் கதை எழுதி தயாரித்துள்ளதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் நேதாஜி பிரபு.சமைரா நாயகியாக நடித்துள்ளார் .
படம் பற்றி நேதாஜி பிரபு கூறுகையில் ,” நான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். சினிமா ஆசை விடவில்லை, வந்து விட்டேன். ஆனால் வழக்கமான படமாக எடுக்கக்கூடாது என்று நினைத்தேன். உண்மைச்சசம்பவத்தை வைத்து எடுக்க நினைத்தேன். இயற்கை வழிகளில் உண்டு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே நம் முன்னோர்கள் ஒளடதம் குறை, ஒளடதம் தவிர் என்றார்கள்.
அதன் பின்னணி மருந்துகளை அதிகம் உண்ணக்கூடாது என்பதுதான். ‘ஒளடதம் ‘ என்கிற பெயரில் மருத்துவம் பற்றி எடுக்க ஒரு கதை தேடினேன். அப்போது மருத்துவ உலகின் கறுப்பு பக்கங்களைப் புரட்டிக் காட்டும்படியான ஒரு மோசடி பற்றிய செய்தி 2013 மே14 ல் வந்திருந்தது.
இது பற்றி 2016 ஆண்டிலும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதைப் பார்த்தேன். தவறான மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்த அந்தச் செய்தி காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டது. ஆனால் அந்த மருந்து வியாபாரம் இன்னும் கேட்பாரில்லாமல்
தொடரவே செய்கிறது. இது பற்றிப்படம் பேசுகிறது. படம் ஒரு கமர்சியல் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது. இதற்காக ஒரு நிஜமான மருந்துக்கம்பெனியில் 8 நாட்கள் படப்பிடிப்புநடத்தியுள்ளோம்.” என்கிறார்.