செல்வராகவன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ’கான்’ வேகமாக வளர்ந்துவருகிறது. குறுகிய கால தயாரிப்பாக செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தயாரிக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப் படத்தின் போஸ்டரில் நெற்றியில் திருநீர் குங்குமத்துடன் முருக பக்தர்போல் தோன்றினார். சிம்பு. இரண்டாம் உலகத்தின் இரண்டாவது பாகமாக இருக்கலாம் என்றும் கோலிவுட்டில் பேச்சு எழுந்தது, ஆனால்,இப்படத்தில் சிம்பு, பெற்றோருக்கு அடங்கி எந்த வம்புதும்புக்கும் போகாத முருக பக்தராக நடிக்கிறாராம் அதோடு சென்னை நகரை வெடிகுண்டு வைத்துத் தகர்க்க முயலும் ஒரு தீவிரவாத கும்பலை ரகசியமாக கண்டுபிடிக்கும் ரா உளவுத் துறை அதிகாரியாகவும் நடிக்கிறார் என்கிறார்கள்.. முருக பக்தரும் ரா அதிகாரியும் ஒருவரா இல்லது இரட்டை வேடமா! என்பது சஸ்பென்ஸ் என்கிறதுபடக்குழு. கேத்ரின்தெரசா முருக பக்தரின் காதலியாகவும், டாப்சி, உளவுத் துறை அதிகாரிக்கு ஜோடியாகவும் நடிக்கிறார்களாம்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவும் செல்வாவுடன் கைகோர்த்திருப்பதால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.