‘காதல் வாழ்விலே..காதல் வாழ்விலே, ஓஒ!
கண்டதே கண்டதே…உல்லாசம் !’ என மனசெல்லாம் நிறைந்திருக்கு சமந்தாவுக்கு!
அவரின் ஐந்து படங்களும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். காதல் கணவர் நாக சைதன்யாவின் படங்களும் ஹிட்!
கல்யாணம் நடந்து ஒரு வருஷம் ஆகப்போவுது! போன அக்.6 -ல் திருமணம். இதனால் கணவருடன் வெளிநாடு சென்று அனிவர்சரியை ஆனந்தமாக கொண்டாடப் போகிறார். எந்த நாட்டுக்கு போகிறோம் என்பதை இன்னும் சொல்லவில்லை. ஆனால் இருவரும் அக்.6 ம் தேதிக்கு முன்னதாக ஹைதராபாத்தில் இருந்தாக வேண்டும்.
அன்று அவர்களது புதிய பட பூஜை.!